Poem
விடியல் மிக அருகில்
விடியல் மிக அருகில்
மனமே!
நம்பு.
பூமிப்பந்து
இந்தச் சுற்றை முடிக்க
இதோ.. இதோ..
மனமே!
பொறு.
நிசியும்
நிசப்தமும்
நிறைவுறும் நேரம்
ஒளியின்
செங்கோல்
ஓங்கிடும் காலம்
விழிகள்
மொழிகள்
இயங்கும், இயக்கும்
மனிதம்
மலரும்
மக்களின் உணர்வாய்..
வைகறைப்
பொழுது
வாசல் திறக்கும்
வானம்
முழுதும்
வண்ணக்கோலம்.
Comments (0)
Be the first to say something kind.
Sign in to like and comment.